ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டனில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி பிரமாதப்படுத்தினார். சன் யுவுக்கு எதிராக 7 ஆட்டங்களில் விளையாடி அதில் 6-ல் சாய்னா வெற்றி கண்டிருப்பது நினைவு இதில் கூரத்தக்கது.
ஆஸ்திரேலிய ஓபனை சாய்னா வென்றிருப்பது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 2014-ம் ஆண்டில் இங்கு மகுடம் சூடியிருக்கிறார். ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் கோப்பையை வென்ற இந்திய வீராங்கனை சாய்னா நேவால் ஒற்றையர் தரவரிசையில் 8-வது இடத்தில் இருந்து 6-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். சிந்து 10-வது இடத்தில் நீடிக்கிறார். ஆண்கள் ஒற்றையரில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் இரு இடம் உயர்ந்து 11-வது இடம் பிடித்துள்ளார்.