சிக்கனமாக பந்து வீசி எதிரணியை தன் கட்டுப்பாட்டில் வைக்கும் சுனில் நரைன்

மேற்கிந்திய தீவுகள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் சிக்கனமாக பந்து வீசி எதிரணியை தன் கட்டுப்பாட்டில் வைக்கும் திறமைமிக்கவராக அசத்துகிறார்.

ஒருநாள் போட்டிகள் முதல் டி20 வரை வீரர்கள், இவரின் பந்து வீச்சில் திணறி வருகின்றனர். வித்தியாசமான யுக்திகளை மேற்கொண்டு எதிரணிகளின் விக்கெட்டுகளை வீழ்த்தி விடுகிறார்.

ஐ.பி.எல் போட்டிகளில் மிரட்டிய சுனில் தற்போது நடந்து வரும் சம்பியன்ஸ் லீக் போட்டிகளிலும் மிரட்ட ஆரம்பித்துள்ளார். சென்னைக்கு எதிரான முதல் போட்டியில் 4 ஓவர்கள் வீசி 1 விக்கெட்டுகளை மட்டும் கைப்பற்றி இருந்தாலும், சிக்கனமாக 9 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

இதன் மூலம் சென்னை அணியின் ஓட்டங்கள் வெகுவாக குறைந்து கொல்கத்தாவுக்கு நிர்ணயிக்கப்படும் இலக்கு எளிதானதாக மாறியது. இதனால் முதல் போட்டியில் சென்னைக்கு ஏமாற்றம் தான் கிடைத்தது.

டி20 போட்டிகளில் குறைந்தது 12 பந்துகளை எடுத்துக் கொண்டால் இவருடைய சிக்கனமான பந்து வீச்சு விகிதம் 2.25 என உள்ளது. இது இவருடைய சிறப்பான பந்துவீச்சை காட்டுகிறது.

நேற்று லாகூர் அணிக்கு எதிரான போட்டியில் கூட 9 ஓட்டங்களை மட்டும் கொடுத்த நரைன், 3 விக்கெட்டுகளை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அசத்துகிறார்அணியின்எதிரணியைகட்டுப்பாட்டில்சிக்கனமாகசுனில்சுழற்பந்துதன்திறமைமிக்கவராகதீவுகள்நரைன்பந்துமேற்கிந்தியவீசிவீச்சாளர்வைக்கும்
Comments (0)
Add Comment