சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தை ஆஸ்திரேலியா ஆதரிக்க வேண்டும் – செனட் சபையில் பிரேரணை நிறைவேற்றம்

சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவுள்ள தீர்மானத்தை ஆஸ்திரேலியா ஆதரிக்க வேண்டும் – செனட் சபையில் பிரேரணை நிறைவேற்றம்

இலங்கையின் இறுதிகட்ட போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து, ஒரு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என, ஐ நா வின் மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டுவரவுள்ள ஒரு தீர்மானத்தை ஆஸ்திரேலிய அரசு ஆதரிக்க வேண்டும் என்று கோரும் தீர்மானம் ஒன்று இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் பசுமை கட்சியால் இன்று செனட் சபைக்கு கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப் பட்டுள்ளது.
எனினும் இந்தத் தீர்மானம் ஆஸ்திரேலியாவை ஆளும் கூட்டணி அரசை இந்த தீர்மானம் கட்டுப்படுத்தாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனாலும், ஆளும் கூட்டணியில் இருக்கும் லிபரல் கட்சியின் உறுப்பினர் ஒருவர் செனட் சபையில் இந்தத் தீர்மானத்தை ஆதரித்துள்ளது, இதற்கு வலுசேர்த்துள்ளது.

இந்தத் தீர்மானம் முன்னெடுக்கப்படுவதில் ஆஸ்திரேலியாவில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சாரங்களும் அழுத்தங்களும் இருந்தன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

போர்க் குற்றங்கள்மனித உரிமைராஜதந்திரம்வெளிநாட்டுறவு
Comments (0)
Add Comment