சிறிலங்காவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!

ஸ்ரீலங்கா அணிக்கு எதிரான 2வது T20 போட்டியில் நியூசிலாந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்தப் போட்டியில் மார்டின் குப்தில், கொலின் முன்ரோ ஆகிய இருவருமே 20 பந்துகளுக்குள் அரைசதம் அடித்தனர். இது ஒரு புதிய சாதனையாகும்.

  • குப்தில் 19 பந்துகளில் அரைசதம் எடுத்து புதிய சாதனையை நிகழ்த்த, அடுத்து வந்த முன்ரோ அதே இன்னிங்சில் அந்தச் சாதனையை 14 பந்துகளில் அரைசதம் கண்டு முறியடித்தது. இது இதற்கு முன்பு நடைபெறாத ஒரு சாதனை நிகழ்வாகும்.
  •  முன்ரோவுக்கு முன்னதாக இங்கிலாந்துக்கு எதிராக 2007ம் ஆண்டு டி20 உலகக்கிண்ண போட்டியில் யுவராஜ் சிங் ஒரே ஓவரில் 6 சிக்சர்களுடன் 12 பந்துகளில் அரைசதம் கண்டதே இன்று வரை உலக சாதனையாக இருந்து வருகிறது.
  •  முன்ரோ தனது 50 ஓட்டங்களில் 46 ஓட்டங்களை பவுண்டரி, சிக்சர்களிலே எடுத்துள்ளார். இதன் மூலம் இவர் ஷேன் வாட்சனுக்கு அடுத்தபடியாக சாதனை படைத்துள்ளார்.
  • ஷேன் வாட்சன் இலங்கைக்கு எதிராக 2011 ஆண்டில் நடந்த டி20 போட்டியில் 57 ஓட்டங்கள் எடுத்த போது 54 ஓட்டங்களை பவுண்டரிகள், சிக்சர்களிலேயே எடுத்தார்.
  •  நியூசிலாந்து அணி 143 ஓட்ட இலக்கை எடுக்க 10 ஓவர்களையே எடுத்துக் கொண்டது. 120 ஓட்டங்களுக்கு மேலான இலக்கில் இது இதுவே முதல்முறையாகும்.
  • கடந்த 2007ம் ஆண்டு நடந்த டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி, பாகிஸ்தானின் 130 ஓட்டங்களில் இலக்கை 11.3 ஓவர்களில் துரத்தியதே சாதனையாக இருந்தது.
அபாரசிறிலங்காவைநியூசிலாந்துவீழ்த்திவெற்றி
Comments (0)
Add Comment