சிறீலங்கா கடற்படையினரால் காணி சுவீகரிக்கப்படவுள்ளது – வாருங்கள் போராடுவோம் –அழைக்கிறார் அனந்தி

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயமாகஆக்கிரமிக்கப்பட்டு அண்மையில் விடுவிக்கப்பட்ட திருவடிநிலை உள்ளிட்ட பகுதிகளில் கடற்படைக்கான நிலசுவீகரிப்புப் பணி இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்கு  எதிராக போராட அனந்தி சசிதரன் அழைப்புவிடுத்துள்ளார்.

கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மற்றும் ஆக்கிரமிக்கப்படவுள்ள  நிலங்களென  சுமார்  120 ஏக்கர்  வரையில் நாளை  நிரந்தர  சுவீகரிப்பிற்கென  நில அளவை  செய்யப்பட உள்ளதாகவும்  தமிழ்த்  தேசிய  கூட்டமைப்பின் வடமாகாணசபை  உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

சுழிபுரம் – திருவடிநிலைக்கு இடைப்பட்டதாக கடற்கரையினை உள்ளடக்கி  இந்நிலப்பரப்பு  கடற்படையினரால் சுவீகரிக்கப்படவுள்ளது.  ஏற்கனவே  திருவடி  நிலைப்பகுதியில் சங்கமித்தை  வந்திறங்கிய  பகுதியென தெரிவிக்கப்பட்டு  பாரியவிகாரையொன்று  அமைக்கப்பட்டு  உள்ளதுடன்  அங்கு பெருமளவிலான  நிலம் சுவீகரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே நாளை நடைபெறவுள்ள காணி சுவீகரிப்பிற்கானநில அளவைக்கு எதிராக போராடப்போவதாக அப்பகுதி மக்கள்அறிவித்துள்ளனர். தமது போராட்டத்திற்கு ஆதரவு கோரிமாகாணசபை உறுப்பினர்களுக்கும் மக்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த அழைப்பை ஏற்று மாகாண சபைஉறுப்பினர்கள் பலர் போராட்டத்தில் இணைய உள்ளதாகமாகாண சபையின் முக்கியஸ்த்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அச்சுவேலி, திக்கம் மற்றும் சாவகச்சேரி என பலபகுதிகளினிலும் முன்னெடுக்கப்பட்ட நில அளவை பணிகள்மக்களது எதிர்ப்பு போராட்டங்களினால் கைவிடப் பட்டிருந்தது.அந்த வகையில் இந்தக் காணிகளின் உரித்துடையோரும்போராட்டத்தில் இணைவதன் ஊடாகவே படையினரின் காணிஆக்கிரமிப்பை தடுக்க முடியும் எ்னற கருத்தையும் சமூகஆர்வலர் ஒருவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக  ஏற்கனவே  அச்சுவேலி,  திக்கம்  மற்றும்  சாவகச்சேரிப குதிகளில்  இடம்பெற்ற  போராட்டங்கள்  வெற்றி அளித்தமைக்கு  காணி  உரிமையாளர்களும்  போராட்டத்தில் குதித்து  இருந்தமையே  பிரதான காரம்  எனச்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்குஅனந்திஅழைப்புவிடுத்துள்ளார்.ஆரம்பமாகவுள்ளஇன்றுஉள்ளிட்டஎதிராககடற்படைக்கானசசிதரன்திருவடிநிலைநிலசுவீகரிப்புப்நிலையில்பகுதிகளில்பணிபோராட
Comments (0)
Add Comment