சிறுநீரகக் கோளாறினால் பாதிக்கப்பட்ட பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே

பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சிறுநீரகக் கோளாறினால் பாதிக்கப்பட்ட பீலே, சா பாவ்லோ நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பீலேவுக்கு ரத்த சுத்திகரிப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுவதால் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வேறு அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பீலேவுக்கு ரத்த ஓட்டம் சீராக இருப்பதால் அவர் நடைபயிற்சியில் ஈடுபட்டதாகவும் உணவு உட்கொள்வதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரேசில் அணிக்கு 3 முறை உலக கோப்பை வென்று கொடுத்த பெருமைக்குரிய கால்பந்து வீரரான பீலே 20-ம் நூற்றாண்டின் சிறந்த கால்பந்துவீரர் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றவர்.

இரத்தம்உடல்கால்பந்துகோளாறுசிறுநீரகம்சுத்திகரிப்புஜாம்பவான்தீவிர சிச்சைபிரேசில்பீலேமுன்னேற்றம்
Comments (0)
Add Comment