காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்ற உண்மையை அவர்களின் உறவுக்களுக்கு தெரிவிக்கும் வரை அவர்களுக்கு எத்தனை முறை நஸ்ட ஈடு வழங்கினாலும் எத்தனை வாக்குறுதி வழங்கினாலும் அது அவர்களால் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக அமையாது என திருகோணமலை மாவட்ட பெண்கள் சமாசத்தின் தலைவி எம்.என்.இல்முனிசா தெரிவித்தார்.
நேற்று உப்புவெளி பிரதேச சபை மண்டபத்தில் இடம் பெற்ற ஊடக மாநாட்டில் இவ்வாறு தெரிவித்தார். சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட பெண்கள் சமாசம் மற்றும் அமரா குடும்பத் தலைமை தாங்கும் பெண்கள் ஒன்றிய நடத்திய ஊடக மாநாட்டில் இவ்வாறு தெரிவித்தனர்.
தொடர்து கருத்து தெரிவிக்கையில் காணமல் ஆக்கப்பட்டோர் கைது செய்யபட்டு இராணுவத்தால் கொண்டு செல்லப்ட்டவர்கள் மற்றும் சரணடைந்தவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை அரசு தெரிவிக்க தவறி வருகின்றது.
இழப்பீட்டக்கான அலுவலகத்தில் மக்களை அணுகாமல் இழப்பீட்டுத் தொகையை நிர்ணயிக்க முடியாது எனவே காணாமல் போன உறவுகளின் குடும்பம் ஒன்று அந்த உறவு இருந்திருந்தால் எவ்வளவு பொருளாதாரத்தை ஈட்டி இருப்பாரோ அதை வழங்குவதே உண்மையான இழப்பீடு அதை தவிர ஆறாயிரம் ,பத்தாயிரம் என்று வழங்குவது கண்துடைப்புக்காக மட்டுமே.
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும் கேட்கப்பட்டது உங்கள் ஆதரவு எவ்வாறு அமையும் என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியமைக்கு ஒவ்வொரு அரசியல் கட்சியும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுட்டும் அதில் வடக்கு கிழக்கு மற்றும் தெற்கில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு சரியான தீர்வொன்றை வழங்குவதாக உறுதியளிக்கும் கட்டிசியின் வேட்பாளரக்கு நாம் எமது ஆதரவை வழங்க தயாராக உள்ளோம் என தெரிவித்தனர்.
அதன் பின்னர் அன்புவழிபுரம், கப்பல்துறை இராஜவரோதயம் சதுக்கம் , சல்லி சாம்பல்தீவு போன்ற பகுதிகளில் இருந்து வந்த தாய்மார் தமது பிள்ளைகளை கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு தெரியப்படுத்தினர்.