சென்னையில் வசூல் சாதனை செய்யும் லேடி சூப்பர்…

‘டிமான்டி காலணி‘ என்ற பேய் படத்தின் மூலம் பிரபலமடைந்த இயக்குனர் அஜய் ஞானமுத்து அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் ‘இமைக்கா நொடிகள்‘

இப்படத்தில் நயன்தாரா, அனுராக் காஷ்யப், அதர்வா, கௌரவ தோற்றத்தில் விஜய் சேதுபதி என பலர் நடித்துள்ள திரைப்படம் சென்றவாரம் ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தை திரையுலகினர் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இப்படம் சென்னையில் மட்டும் ஒரு கோடிக்கு அதிகமாக வசூல் சாதனை படைத்துள்ளது.

ஏற்கனவே நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படமும் வசூல் அள்ளியது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜய் ஞானமுத்துஅதர்வாஅனுராக் காஷ்யப்நயன்தாரா
Comments (0)
Add Comment