சென்னை மரீனாவில் பெரும்திரளாக ஒன்றுகூடி இளைஞர்கள் போராட்டம்! தமிழர் மரபை நிலைநாட்ட உலகத்தமிழர்கள் ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கக் கோரி, கடந்த 8-ம் தேதி மெரீனாவில் இளைஞர்கள் பெரும் திரளாக ஒன்று கூடி போராட்டம் நடத்தினர். இவர்களை ஒருங்கிணைத்தது சமூக வலைத்தளங்களே.
அதேபோல அலங்காநல்லூரில் நேற்று காலை தொடங்கிய ஜல்லிக்கட்டு தடை நீக்க கோரும் போராட்டம் விடிய விடிய நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று காலை 8 மணியளவில் மீண்டும் மெரீனாவில் இளைஞர்கள் ஒன்றுகூட இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. அலங்கா நல்லூரில் போராடி வருபவர்களுக்கு ஆதரவளிக்கும் விதத்தில் அழைப்பு விடுப்பதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ளது.

தமிழர்களின் வரலாற்றினை பறைசாற்றும் இந்த காளை அடக்குதல் தடையை நீக்க பெரும்திரளாக இணைந்திருக்கும் தமிழக இளைஞர்களுக்கு உத்வேகம் கொடுக்கும் நோக்கில் உலகத்தமிழர்கள் ஒன்றிணைந்து குரல் கொடுப்போமாக..

உச்சநீதிமன்றம்உலகத்தமிழர்கள்காளை அடக்குதல்தடைதமிழக இளைஞர்கள்போராட்டம்மரினா
Comments (0)
Add Comment