சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 5 ஆட்டத்தில் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி காரைக்குடி காளையை 67 ரன் வித்தியாசத்திலும், காஞ்சி வாரியர்சை 7 விக்கெட் வித்தியாசத்திலும், திண்டுக்கல் டிராகன்சை 6 ரன்னிலும் வென்றது. தூத்துக்குடி பேட்ரியாட்சிடம் 45 ரன்னிலும், கோவை கிங்சிடம் 11 ரன்னிலும் தோற்றது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6-வது ஆட்டத்தில் மதுரை சூப்பர் ஜெய்ன்ஸ் அணியை நாளை (10-ந்தேதி)எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு நடக்கிறது.
ஆர்.சதீஷ் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மதுரையை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறும் ஆர்வத்துடன் உள்ளது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட்டிங், பந்துவீச்சில் சமபலத்துடன் உள்ளது. கோபிநாத், தலைவன் சற்குணம், வசந்த் சரவணன், சசிதேவ், கவ்ஜித் சுபாஷ், சாய் கிஷோர், தமிழ் குமரன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.