யுத்தத்தில் சிங்கள படையினரால் கொன்றொழிக்கப்பட்ட தமிழீழ மக்களுக்கு நியாயம் கிடைப்பதற்காக சர்வதேச அளவில் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்படி ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டின் ஊடாக அந்த நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
ஆனால் கடந்த வருடம் நிறைவேற்றப்பட்ட பிரேரணையானது, சிறிலங்கா அரசாங்கத்தை முழுமையாக ஆதரித்து, காப்பாற்றும் வகையிலும், தமிழ் மக்களை காட்டிக் கொடுக்கும் வகையிலும் அமைந்துள்ளதாகவும். இந்த பிரேரணையால், இறுதி யுத்தத்தில் யுத்தக்குற்றங்களே இடம்பெறவில்லை என்பது போன்ற தோற்றப்பாடு உருவாக்கப்பட்டு வருவதாக அந்த ஊடகம் குற்றம் சுமத்தியுள்ளது.