அந்நிறுவனத்தின்; செய்திப் பணிப்பாளரான தயா மாஸ்டர் என்பவரை தாக்கிய வயோதிபரையே பிணையில் செல்ல யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்தரன் இன்று (30) அனுமதியளித்துள்ளார்.
யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள, டாண் தொலைக்காட்சி ஒளிபரப்புக் கலையகத்துக்கு கடந்த 9ஆம் திகத மாலை வயோதிபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து அங்கு பணியிலிருந்த செய்திப் பணிப்பாளரை தாக்கினார்.
இதனையடுத்து, முதியவரை பிடித்த ஊழியர்கள் யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்ததையடுத்து, நீதிமன்ற உத்தரவுக்கமைய குறித்த முதியவர் தெல்லிப்பளை மனநல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று (30) முதியவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோது, முதியவரை இரு ஆட்கள் பிணையில் செல்ல அனுமதியளித்த நீதவான், வழக்கு விசாரணைகளை எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
குறித்த தொலைக்காட்சி முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் பினாமியான குகநாதனின் பெயரிலுள்ளதாக சொல்லப்படுகின்ற போதும் தற்போது மைத்திரி அரசிடம் அவர் சரணடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.