மீசாலையைச் சேர்ந்த லக்சன் கீர்த்திகா (வயது–27) என்பவரே உயிரிழந்தார். கிளிநொச்சி மாவட்ட விவசாயத் திணைக்களத்தில் விவசாயப் போதனாசிரியராகப் பணியாற்றுகின்றார்.
கீர்த்திகா மகப்பேற்றுக்கான யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கடந்த 21ஆம் திகதி சேர்க்கப்பட்டார். அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அவருக்கு டெங்குத் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டதை அடுத்து கடந்த 25ஆம் திகதி சந்திரசிகிச்சை மூலம் குழந்தை வெளியே எடுக்கப்பட்டது.
மருத்துவனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அவருக்குத் தொடர்ந்து சிகிச்சைகள் வழங்கப்பட்டபோதும் கீர்த்திகா நேற்றுக் காலை உயிரிழந்தார்.சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.