தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

டெங்கு காய்ச்சலால் இளம் தாய் பரிதாபமாக பலி!

இளம் தாய் ஒரு­வர் டெங்­குத் தொற்­றால் உயி­ரி­ழந்­தார். அழ­கிய ஒரு குழந்­தை­யைப் பெற்­றெ­டுத்த 4 நாள்­க­ளில் இந்­தப் பரி­தா­பம் நிகழ்ந்­துள்­ளது.

மீசா­லை­யைச் சேர்ந்த லக்­சன் கீர்த்­திகா (வயது–27) என்­ப­வரே உயி­ரி­ழந்­தார். கிளி­நொச்சி மாவட்ட விவ­சா­யத் திணைக்­க­ளத்­தில் விவ­சா­யப் போத­னா­சி­ரி­ய­ரா­கப் பணி­யாற்­று­கின்­றார்.

கீர்த்­திகா மகப்­பேற்­றுக்கான  யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் கடந்த 21ஆம் திகதி சேர்க்­கப்­பட்­டார். அவ­ருக்கு காய்ச்­சல் ஏற்­பட்­டது. அவ­ருக்கு டெங்­குத் தொற்று ஏற்­பட்­டுள்­ளமை கண்­ட­றி­யப்­பட்­டதை அடுத்து கடந்த 25ஆம் திகதி சந்­தி­ர­சி­கிச்சை மூலம் குழந்தை வெளியே எடுக்­கப்­பட்­டது.

மருத்­து­வ­னை­யின் அவ­சர சிகிச்­சைப் பிரி­வில் அவ­ருக்­குத் தொடர்ந்து சிகிச்­சை­கள் வழங்­கப்­பட்­ட­போ­தும் கீர்த்­திகா நேற்­றுக் காலை உயி­ரி­ழந்­தார்.சாவ­கச்­சே­ரிப் பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­ட­னர்.

Comments
Loading...