மகளிருக்கான இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சானியா மிர்சா – சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் இணைக்கு விருது வழங்கப்பட உள்ளது. முதன் முறையாக உலகச் சாம்பியன் விருதுக்கு தேர்வாகியிருப்பது மிகப்பெரிய கவுரவம் என சானியா மிர்சா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் ஹிங்கிஸ் உடன் இணைந்து விளையாடத் தொடங்கிய சானியா மிர்சா, நடப்பாண்டில் 2 கிராண்ட் ஸ்லாம் உட்பட 9 பட்டங்களை வென்றுள்ளார்.