டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட தோல்விகளுக்கு பதிலடி கொடுக்குமா இந்திய அணி

டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட தோல்விகளுக்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை நாளை எதிர்கொள்கிறது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1–3 என, இழந்தது. இதையடுத்து, ஒருநாள் தொடரில் பயிற்சியாளர் பிளட்சருக்கு உதவ, சஞ்சய் பங்கர், பாரத் அருண் உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.

இவர்கள் பணியை மேற்பார்வை செய்யவுள்ள இயக்குனர் ரவி சாஸ்திரி, அணியினருடன் இணைந்துள்ளார். இந்த அணியில் சஞ்சு சாம்சன், குல்கர்னி, கரண் சர்மா போன்ற இளம் வீரர்கள் களமிறங்க உள்ளனர். இவர்கள், டெஸ்ட் தொடர் தோல்விக்கு சரியான பதிலடி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை பிரிஸ்டலில் நடக்கவுள்ளது.  இப்போதைய நிலையில், இங்கிலாந்து மண்ணில் மற்றொரு தொடரை இழக்காமல் இருப்பதே முக்கியம்.

தரவரிசையில் இங்கிலாந்து 5வது இடம் என பின்தங்கியிருந்தாலும், சொந்தமண்ணில் அவ்வளவு எளிதாக வெற்றியை விட்டுத் தராது. இதனால், டெஸ்ட் தொடரை போல, ஒருநாள் போட்டிகளிலும் அணித்தலைவர் டோனிக்கு கடும் சவால் காத்திருக்கிறது.

பயிற்சி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது நம்பிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. டெஸ்ட் தொடரில் சொதப்பிய கோஹ்லி (10 இன்னிங்ஸ், 134 ஓட்டங்கள்), பயிற்சியில் 71 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார். இந்த சிறப்பான ஆட்டம் தொடருமானால் இந்திய அணி மீண்டும் வலுவானதாக மாறும்.

மேலும் அணியில் புதிதாக இடம் பெற்றுள்ள சஞ்சு சாம்சன், 19, தவால் குல்கர்னி, 25, உள்ளிட்டோர் அவுஸ்திரேலியாவில் நடந்த இளம் வீரர்களுக்கான தொடரில் மிரட்டியவர்கள். அதனால் நாளைய போட்டியில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கலாம்.

இரு அணி வீரர்கள் விவரம்:

இந்தியா: டோனி (அணித்தலைவர்), தவான், ரோகித் சர்மா, ரகானே, வீராட் கோலி, ரெய்னா, ஜடேஜா, அம்பதி ராயுடு, அஸ்வின், சஞ்சு சாம்சன், ஸ்டூவர்ட் பின்னி, புவனேஸ்வர் குமார், தவால் குல்கர்னி, முகமது ஷமி, கரண் சர்மா, மொகித்சர்மா, உமேஷ்யாதவ்.

இங்கிலாந்து: கூக் (அணித்தலைவர்), கேரி பேலன்ஸ், இயன்பெல், மார்கன், அலெக்ஸ், ஹால்ஸ், ஜோரூட், மொய்ன் அலி, பட்லர், பென் ஸ்டோக்ஸ், டிரெட்வெல், ஆண்டர்சன், கிறிஸ் வோக்ஸ், ஜோர்டன், ஹென்றி, ஸ்டீவன்பின்.

இங்கிலாந்தைஇந்திய அணிஎதிர்கொள்கிறது.ஏற்பட்டஒருநாள்கொடுக்கும்டெஸ்ட்தொடரில்தோல்விகளுக்குநாளைபதிலடிபோட்டியில்முதல்வண்ணம்
Comments (0)
Add Comment