தடகள வீரர் டைசனின் மகள் சுட்டுக்கொலை

அமெரிக்காவை சேர்ந்த பிரபல தடகள வீரர் டைசன் கே. 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் உலக அளவில் உசேன் போல்ட்டுக்கு (ஜமைக்கா) அடுத்த இடத்தில் இருப்பவரான டைசன் கே உலக தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்து இருக்கிறார்.

இவரது மகள் 15 வயதான டிரினிடி கே இளம் தடகள வீராங்கனை ஆவார். கெண்டக்கி மாநிலம் லெஸிங்டனில் உள்ள உணவு விடுதியின் கார் நிறுத்தும் பகுதியில் நேற்று அதிகாலையில் இரு தரப்பினருக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையின் போது ஒரு குண்டு குறி தவறி டிரினிடி கேயின் கழுத்தில் பாய்ந்தது. உடனடியாக அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி டிரினிடி கே பரிதாபமாக இறந்தார். டிரினிடி கேயின் மறைவை அவரது தந்தை டைசன் கே டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில் உறுதி செய்துள்ளார். டிரினிடி கே மறைவுக்கு விளையாட்டு பிரபலங்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உறுதிசுட்டுக்கொலைடைசன்தடகளம்மகள்வீரர்
Comments (0)
Add Comment