சிறைக்கைதிகளால், கருணாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால், சிறைச்சாலை அதிகாரிகள் அவரை, எம்-2 சிறைவளாகத்தில் தனியான அறையில் அடைத்துள்ளனர்.
அத்துடன் அவருக்கு சிறைச்சாலையில் சிறப்புப் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. சிறைக்கு வெளியில் இருந்து உணவைப் பெற்றுக் கொள்வதற்கு கருணா கோரிக்கை விடுத்தால், அது பரிசீலிக்கப்படும் என்று சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.