இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தன்னம்பிக்கையுடன் போராடி திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, வங்கதேச ஒருநாள் தொடர் முடிந்தவுடன் டெல்லி, லக்னோவில் பயிற்சி மேற்கொண்டேன். மும்பையில் பந்த்ரா குர்லாவில் சிறப்புப் பயிற்சிக்காக சென்றிருந்தேன்.
அங்கு சச்சின் டெண்டுல்கரைச் சந்தித்த போது சச்சின் எனக்கு சில அறிவுரைகளை வழங்கினார்.
இங்கிலாந்தில் எப்படி ஆடினால் வெற்றிபெற முடியும் என்று நான் அவரிடம் கேட்டேன். அவர் சில ஆலோசனைகளை வழங்கினார், அதேபோல் பிரவீண் ஆம்ரேயிடமும் நீண்ட நேரம் துடுப்பாட்டம் உத்திகள் பற்றி விவாதித்தேன்.
இந்திய அணி கடினமான காலக்கட்டத்தில் உள்ளது. இப்போதுதான் சிறந்த குணாம்சத்தை நாம் வெளிப்படுத்த வேண்டும். இதுபோன்ற தோல்விகளிலிருந்து மீள்வது கடினம்தான், ஆனாலும் மீண்டு வந்து நிரூபித்துதான் ஆகவேண்டும் என்றும் போராட்டக் குணத்தைக் கொண்டு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.