தமிழர் படைபலத்தின் நாள்


ஈழத்தமிழர் வரலாற்றுப் பரப்பில் தமிழ் மன்னர்கள் பல வீரமிகு போர்களை செய்திருந்தாலும் வரலாற்றுப்பதிவில் அப்போர்கள் எப்போ நடந்தது என்று துல்லியமாக பதிவிடப்படவில்லை.

அந்த வகையில் பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் வன்னியில் அவர்களுக்கு செயற்பட்டவன் பண்டாரவன்னியன் ஆவான். இவனே வன்னியின் இறுதி மன்னனுமாவான்.

அந்தவகையில் 25.08.1803 இல் முல்லைத்தீவில் இருந்த கோட்டையைக் கைப்பற்றி அங்கிருந்த பீரங்கிகளை இழுத்துச்சென்ற வெற்றித்தாக்குதலின் பதிவே வரலாற்றாதாரமாக எம்மிடமுள்ளன.

1996 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளினால் முல்லைத்தீவுத் தளம் அழிக்கப்பட்டு அதன் ஓராண்டு வெற்றிவிழா 1997 இல் சிறப்பாக நடைபெற்றது. இந்த வெற்றியை வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாக கொண்டாட முடிவெடுத்தனர்.

அந்தநேரம் எம்மிடம் வரலாற்று பதிவாக உள்ள பண்டாரவன்னியன் முல்லைத்தீவை கைப்பற்றிய நாளான 25.08.1803 நாளினை தமிழர் படைபலத்தின் நாளாக விடுதலைப்புலிகள் 1997 இல் அறிவித்தனர்.

அந்தக் காலப்பகுதியில் ஜயசிக்குறூய் என்ற போரரக்கன் வன்னிமீது வலைவிரித்ததனால் இந்த நாளை சிறப்பாக கொண்டாட முடியவில்லை. 2001 ஏற்பட்ட சமாதான காலத்தினைத் தொடர்ந்து 2002 ஆண்டு இதே நாளில் கற்சிலை மடுவில் பண்டார வன்னியனுக்கு சிலை வைக்கப்பட்டது. அப்படிப்பட்ட தமிழர் படைபலத்தின் நாள் இன்றாகும்.

அ.மயூரன்

தமிழர் படை பலத்தின் நாள்பண்டார வன்னியன்முல்லை மீட்புமுல்லைத்தீவு
Comments (0)
Add Comment