முள்ளிவாய்க்கால் ஞாபகார்த்த தினத்தை அடிப்படையாக கொண்டே, இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மே18 ஆம் திகதி, முள்ளிவாய்க்கால் ஞாபகார்த்த தினமாகும். அக்கினிச் சிறகுகள் அமைப்பின் தலைவர் செல்வநாயகம் ஆனந்தவர்மன், வவுனியா பயங்கரவாத விசாரணை பிரிவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இந்தச் சுற்றுப்போட்டிக்கு எவ்வாறு நிதி கிடைக்கின்றது.
இதில், தமிழ் புலம் பெயர்ந்தோர் சம்பந்தப்பட்டுள்ளார்களா என அவரிடம் கேட்கப்பட்டுள்ளது. சுற்றுப்போட்டியில் ஞாபகார்த்த தீபம் ஏற்றப்படுமா எனவும் அவரிடம் கேட்கப்பட்டுள்ளது. இதேபோல கிளிநொச்சி மாவட்ட கால்பந்து லீக் பொருளாளரிடம் தொலைபேசி மூலமாகக் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
வவுனியா ஜோசப் முகாமிலிருந்து பேசுவதாகக் கூறியே, இந்தக் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. புலம்பெயர்ந்தோர் சம்பந்தம் இல்லையெனத் தாம் கண்டால் சுற்றுப்போட்டியை நடத்த அனுமதிக்கப்படும் என பொருளாளரிடம் கூறப்பட்டதாக அறியமுடிகின்றது. இந்த விவகாரம் தொடர்பில், வெளியான செய்தியை உறுதிப்படுத்துவதற்கும், பாதுகாப்புத் தரப்பு விளக்கத்தை கோருவதற்கும் முயன்றபோதிலும் அம்முயற்சி கைகூடவில்லை.
எது எவ்வாறிருப்பினும் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவு நாளில் விளையாட்டு போட்டி நடத்துவது அதுவும் தமிழர்கள் நடத்துவது இனத்துக்கே மிகவும் கேவலமான செயல் ஆகும்.உண்மையில் இதன் பின்னணியில் இருப்பவர்கள் தமிழர்களாக இருக்க முடியாது.