இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இன்றைய தினம் இவ்வுலக வாழ்வை முடித்து இறைவனடி சேர்ந்த தமிழினி என்று அழைக்கப்படுகின்ற சுப்பிரமணியம் ஜெயக்குமார் சிவகாமியின் இறப்பு செய்தியினை தெரியப்படுத்திய உறவுகள் அனைவருக்கும் மற்றும் அன்னாரின் பூதவுடலை உடனடியாக விடுவித்து கொடுக்க உதவிய வைத்தியசாலை வட்டாரங்களுக்கும் முதற்கண் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
அத்துடன் அன்னாரின் பிரிவால் துயரடைந்துள்ள தமிழினியின் குடும்பத்தார், உறவினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து நிற்கின்றேன்.
மேலும், அன்னாரின் பூதவுடல் இன்றைய தினம் மகரகம வைத்தியசாலையில் இருந்து அன்னாரது ஊராகிய 8ஆம் ஒழுங்கை, சிவபுரம் குடியிருப்பு, பரந்தனில் இருக்கின்ற அவரது வீட்டிற்கு எடுத்துவரப்பட இருக்கின்றது. எனவே, உலகெங்கிலும் இருக்கின்ற எமது தமிழ் உறவுகள் அனைவரும் ஒரு நிமிடம் தமிழினியின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்யுங்கள். அத்தோடு எமது பகுதியில் இருக்கின்றவர்கள் முடியுமானால் இன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெற இருக்கும் அஞ்சலி நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.