தமிழின அழிப்பு வாரத்தை முன்னிட்டு தமிழ் இளையோர் அமைப்பினரால் யேர்மனியில் பிரான்க்புர்ட் நகரில் நற்பணி செய்யப்பட்டது . வசிப்பதுக்கு வீடும் அற்று நகர வீதியில் எவ்வித உதவிகளும் இல்லாது தவிக்கும் மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது .
முள்ளிவாய்கால் படுகொலை நாட்களில் எமது உறவுகள் உண்பதுக்கு உணவற்ற நிலையில் வெறும் அறுசுவை அற்ற கஞ்சியை மட்டும் உண்டு உயிர் வாழ்ந்து வந்தார்கள் . அந்தவகையில் அந்த வலியை உலகில் எவ்வித மக்களும் அனுபவிக்க கூடாது என்பதுக்கு அமையவே இந்த செயற்பாடு அடையாள ரீதியாக தமிழ் இளையோர் அமைபினரால் முன்னெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .அத்தோடு தமிழின அழிப்புக்கு நீதி கோரும் வகையில் துண்டுப்பிரசுரமும் இளையோர்களால் யேர்மன் மொழியில் விநியோகிக்கப்பட்டது .
தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி