நகரசபை நிர்வாகத்திலுள்ள பிரதான விளையாட்டு மைதான புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களினால் இவை கண்டு பிடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
மைதானத்தில் குறிப்பிட்ட பகுதி துப்பரவு செய்யப்பட்ட போது 5 அடி ஆழத்தில் காணப்பட்ட குழியொன்றில் இந்த எலும்புகள் கண்டெடுக்கபட்டன.
காவல்துறையால் திருகோணமலை நீதிமன்றத்தில் இது தொடர்பில் முன் வைக்கப்பட்ட அறிக்கையின் பேரில் வியாழக்கிழமை மாலை மஜிஸ்திரேட் டி. சரவணராஜா அந்த இடத்தை நேரில் பார்வையிட்டார்.
எதிர்வரும் புதன்கிழமை வரை அந்த பகுதிக்குள் வெளியார் நடமாட்டத்திற்கு தடை விதித்த அவர், பாதுகாப்பு உறுதிப்படுத்தல் தொடர்பிலும் காவல் துறைக்கு உத்தரவு பிறப்பித்தார்.
மன்னார் மனித புதைகுழியில் தோண்டுகின்ற போதெல்லாம் தொடர்ச்சியாக மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்படுகின்ற இந்நிலையில் இந்த புதைகுழியின் மேலதிக பணிகள் சிறிலங்கா அரசால் மறைக்கப்படும் சாத்தியம் இருப்பதாக சந்தேகம் பொதுமக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.