இன்று நடைபயணத்தில் ஈடுப்பட்டுள்ள உறவுகள் நெதர்லாண்ட் நாட்டில் வாழ்கின்ற தமிழ் உறவுகளை சந்தித்து தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்து கலந்துரையாடினார்கள். இன்றைய சந்திப்பில் தமிழ் இளையோர்களும் உணர்வுப்பூர்வமாக கலந்துக் கொண்டார்கள்.
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த திரு சூரி, பிரித்தானியாவைச் சேர்ந்த திரு சிவந்தன், யேர்மனியைச் சேர்ந்த திரு செந்தில்குமரன் மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த திரு வித்தியானந்தன் ஆகியோர் கடும் குளிர் காற்று எனக் காலநிலை சீராக இல்லாத சுழ்நிலையிலும் மாவீரர்களினதும் மக்களினதும் நினைவுகளை மனத்தில் பதித்து உறுதியோடு நடந்து வருகின்றனர். தமிழின அழிப்பை பல்லின மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாக பல்வேறு மொழிகளில் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
நாளை காலை நாங்காவது நாளாக ஆரம்பமாகவிருக்கின்ற நடைபயணமானது 12:00 மணியளவில் பெல்கியம் நாட்டின் எல்லையை வந்தடையவுள்ளார்கள் என செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐ.நா. நோக்கிய நீதிக்கான நடைப்பயணத்தில் பங்கெடுக்கும் நெதர்லாண்ட் நாட்டை சேர்ந்த சூரி பிரித்தானியாவை சேர்ந்த சிவந்தன் யேர்மனியை சேர்ந்த செந்தில்குமரன் மற்றும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வித்தியானந்தன் ஆகியோரின் சனநாயகப் போராட்டம் வெற்றி அளிப்பதற்காகவும் அவர்களை வாழ்த்துவதற்காகவும் உலகத் தமிழ் மக்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்: 0031684999900 மேலதிக தகவல் அறியத்தரப்படும்.