தமிழீழ பெண்கள் எழுச்சி நாளில் லண்டனில் மது விருந்து நடாத்தும் இன விரோதிகள்!

ஈழ விடுதலைப் போராட்டத்தின் போது பெருமளவான ஈழத்தமிழர்கள் அகதிகளாக இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர்.

இதில் பலர் ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு பெருமளவான பங்களிப்பும் செய்ததோடு மாவீரர்களாக வீர மரணம் அடைந்தார்கள். முள்ளிவாய்கால் யுத்தத்தின் பின்னர் பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள புலம்பெயர் உறவுகள் தாயக விடுதலைக்காக இன்று வரை போராடி வருவதோடு பெரும் பங்களிப்பும் செய்து வருகின்றனர்.

இதனை பொறுத்துக்கொள்ள முடியாத சிங்கள இனவாத அரசு சிதைக்கும் நோக்கில் பல சதி வேலைகளை ஸ்ரீலங்கா புலனாய்வுத்துறையினரை வைத்து செய்து வருகிறது.

அந்த வகையில் நாளை 14.10.2017 அன்று பிரித்தானியாவில் புலம்பெயர் உறவுகள் மற்றும் போராளிகள் தமிழீழ மகளிர் எழுச்சி நாளினை சிறப்பாக நினைவு கூறவிருக்கும் தருணத்தில் சில தேச விரோத சக்திகள் மாணவர்களையும் மக்களையும் திசை திருப்பும் நோக்கில் களியாட்ட மதுவிருந்து ஒன்றினை லண்டனில் நடத்தவிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க விடையமாகும்.

உலகத்தமிழர்கள் தமிழீழ பெண்கள் எழுச்சி நாளினை பெரும் எழுச்சியுடன் நினைவு கூறும் தருணத்தில் இப்படியான மதுவிருந்து களியாட்டத்தினை நடத்தும் இனவிரோதிகளின் செயற்பாடுகளுக்கு புலம்பெயர் உறவுகள் அடிபணியாது அவதானத்துடன் செயற்படுவது சாலச்சிறந்தது ஆகும்.

 

இன விரோதிகள்நிகழ்வுபெண்கள் எழுச்சி நாள்மது விருந்துலண்டன்
Comments (0)
Add Comment