தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளோடு அரசியலமைப்பு அமையவேண்டும்!

தமிழ் பேசும் மக்­களின் அடிப்­படை அபி­லா­ஷை­களை உறு­திப்­ப­டுத்தும் அர­சி­ய­ல­மைப்­பாக புதிய அர­சி­ய­ல­மைப்பு அமை­ய­வேண்­டு­மென்­பதை தொடர்ச்­சி­யாக அர­சாங்­கத்­திற்கு உணர்த்­த­வேண்­டு­மென பிரித்­தா­னிய உயர்­மட்­டக்­கு­ழு­விடம் பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பு வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்­பிற்கும் இலங்­கைக்கு விஜயம் செய்­துள்ள பிரித்­தா­னி­யாவின் வெளிவி­வ­கார மற்றும் பொது­ந­ல­வாய அலு­வ­லக நிரந்­தர உத­விச்­செ­ய­லாளர் சிமொன் மக்­டொனால்ட், சர்­வ­தேச அபி­வி­ருத்­திக்­கான பிரித்­தா­னிய திணைக்­க­ளத்தின் நிரந்­தர உத­விச்­செ­ய­லாளர் மார்க் லோகொக் உள்­ளிட்ட தலை­மை­யி­லான குழு­வி­ன­ருக்­கு­மி­டை­யி­லான விசேட சந்­திப்­பொன்று நேற்று திங்­கட்­கி­ழமை கொழும்பில் உள்ள எதிர்க்­கட்­சித்­த­லைவர் அலு­வ­ல­கத்தில் நடை­பெற்­றது.

இச்­சந்­திப்பு குறித்து தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­திரன் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளியிடு­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

எமக்கும் பிரித்­தா­னிய குழு­வி­ன­ருக்கும் இடை­யி­லான சந்­திப்பில் அர­சியல் தீர்வு குறித்தே கலந்­து­ரை­யா­டப்­பட்­டி­ருந்­தது. எம்மை சந்­திப்­ப­தற்கு முன்­ன­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை அக்­கு­ழு­வினர் சந்­தித்­தி­ருந்­தார்கள். அவ்­வா­றான நிலையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு குறித்த பிர­த­மரின் கருத்து உள்­ள­டங்­க­லாக சில விட­யங்­களை எம்­மி­டத்தில் வின­வி­யி­ருந்­தனர். குறிப்­பாக புதிய அர­சி­ய­ல­மைப்பு குறித்து எமது அடிப்­படை நிலைப்­பா­டுகள், எமது நம்­பிக்கைகள் குறித்து அவ்­வி­னாக்கள் அமைந்­தி­ருந்­தன.

இதன்­போது இலங்­கையில் காணப்­படும் பிர­தான இரண்டு கட்­சி­களும் ஒன்­றி­ணைந்­தி­ருக்கும் புதிய சந்­தர்ப்பம் ஏற்­பட்­டுள்­ளது. இதற்கு முன்­ன­தாக அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட்ட இரண்டு சந்­தர்ப்­பங்­க­ளிலும் தமிழ் மக்­க­ளி­னு­டைய இணக்­கப்­பாடு காணப்­பட்­டி­ருக்­க­வில்லை. அவ்­வா­றான நிலை­மையே பாரிய பிரச்­சி­னைகள், மூன்று தசாப்த யுத்தம் போன்­ற­வற்­றுக்கு வழி­வ­குத்­தி­ருந்­தது என்­பதை சுட்­டிக்­காட்­டினோம்.

அதே­நேரம் தற்­போது ஏற்­பட்­டுள்ள சந்­தர்ப்­ப­மா­னது எமது மக்­க­ளு­டைய அடிப்­படை அபி­லா­ஷைகள் அனைத்தும் உள்­வாங்­கப்­பட்டு புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­படும் பட்­சத்தில் அது நாட்டில் நிரந்­த­ர­மான தீர்­வொன்றை ஏற்­ப­டுத்தும். அதுவே இந்த நாடு புதி­ய­தொரு பாதையில் பய­ணிப்­ப­தற்­கான சந்­தர்ப்­ப­மா­க­வி­ருக்கும். அண்­மைக்­கா­லத்தில் சர்­வ­தேச சமூகம் இலங்கை விட­யத்தில் ஆர்வம் காட்டி அழுத்­தங்­களை செலுத்தி வரு­கின்­றார்கள். தொடர்ச்­சி­யாக அவர்­க­ளு­டைய கரி­ச­னையும் அழுத்­தங்­களும் காணப்­ப­ட­வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தோம்.

தமிழ் மக்கள், தமிழ் பேசும் மக்­களின் அடிப்­படை அபி­லா­ஷை­களை உறு­திப்­ப­டுத்தும் அர­சி­ய­ல­மைப்­பாக புதிய அர­சி­ய­ல­மைப்பு அமை­ய­வேண்­டு­மென்­பதை தொடர்ச்­சி­யாக அர­சாங்­கத்­திற்கு உணர்த்­த­வேண்­டு­மெ­னவும் குறித்த குழு­வி­ன­ரி­டத்தில் கேட்­டுக்­கொண்டோம் என்றார்.

சமஷ்டி சொற்­பி­ர­யோகம்

இதே­வேளை சமஷ்டி என்ற சொற்­பி­ர­யோ­கத்தை அர­சி­ய­ல­மைப்பில் நேர­டி­யாக பயன்­ப­டுத்­து­வது தொடர்­பாக பேசப்­பட்­ட­தான என்ற வினா­வுக்கு பதி­ல­ளித்­த அவர், அது பற்றி மேற்­படி சந்­திப்பில் பேசப்­ப­ட­வில்லை எனக் குறிப்­பிட்டார்.

கூட்­ட­மைப்பின் நிலைப்­பாடு

சமஷ்டி என்ற சொற்­பி­ர­யோ­கத்தை அர­சி­ய­ல­மைப்பில் நேர­டி­யாகப் பயன்­ப­டுத்­து­வது தொடர்­பாக தமிழ்த்­தே­சி­யக்­கூட்­ட­மைப்பின் நிலைப்­பாடு எவ்­வா­றுள்­ளது என்ற வினா­வுக்கு பதி­ல­ளித்த சுமந்­திரன் எம்.பி,

சொற்­ப­தங்­களை பயன்­ப­டுத்­து­வது பிரச்­சி­னைக்கு தீர்­வாகும் என நாம் ஒரு­கா­லத்­திலும் நினைத்­ததில்லை. பெயர்ப்­ப­ல­கை­களை எவ்­வா­றா­வது எழு­திப்­போட்­டு­வி­ட­மு­டியும். உள்ளடக்கத்திலே எவ்விதமான பொருளும் இல்லாவிட்டால் அதில் எவ்விதமான பலனும் கிடையாது.

சமஷ்டி அடிப்படையிலான ஆட்சி அமைக்கப்படவேண்டுமென்பதே எமது மக்கள் வழங்கிய ஆணையாகும். அது சமஷ்டி என்ற பெயர்ப்பலகையை அர்த்தம் கொள்ள முடியாது. சமஷ்டியின் குணாம்சங்கள் அரசியலமைப்பிலேயே உள்வாங்கப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என்றார்.

அதேநேரம் குறித்த சந்திப்பு திருப்திகரமாக அமைந்திருந்ததாக எதிர்க்கட்சித்தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

அடிப்படை உரிமைஎதிர்க்கட்சிசமஷ்டிசம்மந்தன்தமிழ்மக்கள்பிரித்தானியா
Comments (0)
Add Comment