முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவை கலைக்கப்பட்டுவிட்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. எனினும் இந்த செய்தி உண்மையில்லை. தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகளை குழப்புவதற்காக இவ்வாறான செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
அரசியல் தீர்வு திட்டத்தினை தயாரிக்கும் பணிகளில் தமிழ் மக்கள் பேரவையின் உப குழு மும்முரமாக ஈடுபட்டு வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கபப்ட்டுள்ளது.