தாயக உறவுகளிற்கு உதவும் “உதவும் இதயங்கள்”

ஒரு புறம் தெற்கில் ஜனாதிபதி தேர்தல் கொண்டாட்டங்கள் சூடுபிடித்துள்ள போதும் யுத்த அவலங்களின் வலிகளை தாங்கியிருக்கின்ற வன்னி உறவுகள் பற்றி பலரும் மறந்தே போய்விடுகின்றார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலசில உதவிகள் எட்டிப்பார்ப்பதைத் தவிரச் சொல்லிக்கொள்ள ஏதுமின்றித்தான் இருக்கின்றது.

ஆனால் மனிதம் பொய்த்துப்போய்விடவில்லையென்பதை புலம்பெயர் உறவுகள் சிலவேனும் மனங்கள் வெளிப்படுத்தியே வருகின்றன. அவ்வகையில் ஜெர்மனியைச் சேர்ந்த சசிதரனின் தனது புதல்விகளான குயிலினி (வயது 6) தமிழி (வயது-1) ஆகியோரது பிறந்த தினங்களை முன்னிட்டு புதுக்குடியிருப்பு கைவேலியை சேர்ந்த மாவீரர் ஒருவரது பிள்ளைகளது படிப்பினை பொறுப்பேற்றுள்ளார்.

அதே போன்று வவுனியா பம்பைமடுவில் நடமாடக்கூட முடியாத முள்ளந்தண்டு பாதிப்பிற்குள்ளாகி சிகிச்சை பெற்றுவரும் 12 உறவுகளிற்கு தேவையான உதவிகளை வழங்கியுமுள்ளார்.

உதவும் இதயங்கள் அமைப்பினரூடாக வழங்கப்பட்ட உதவிகளை அதன் இலங்கை இணைப்பாளர் ச.சஜீவன் (வலி.வடக்கு மீள்குடியேற்ற குழு தலைவர்) எடுத்துச்சென்று சேர்ப்பித்துள்ளார்.

பிறந்த நாள் கொண்டாடும் ஜெர்மனியை சேர்ந்த சசிகரன் தனது புதல்விகளான குயிலினி(வயது 6) தமிழி(வயது-1) இருவரையும் தேசம் மனதார வாழ்த்துகின்றது. நீங்களும் வாருங்களேன்…

உதவிஉறவுகுயிலினிஜெர்மனிதமிழிபுலம் பெயர்வன்னிவலி
Comments (0)
Add Comment