கனகராயன் குளம் பகுதியில் உள்ள பெரியகுளம் கிராமத்தின் வீதி ஒழுங்கைகளின் தமிழ் பெயர்கள் மாற்றப்பட்டு சிங்கள பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன என்று அப்பகுதி மக்கள் கவலை தெரிவிப்பதுடன், இது குறித்து தமிழ் தலைவர்களோ, பிரதேச சபையினரோ எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர்.
யுத்தம் முடிவடைந்து மீள்குடியேற்றம் இடம்பெற்ற பின்னர் அப் பகுதி இராணுவத்தினரால் கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் உள்ள மூன்று ஒழுங்கைகளுக்கு சிங்களப் பெயர்கள் சூட்டப்பட்டு அவற்றின் பெயர் பலகைகளும் நடப்பட்டுள்ளன. இவ்வாறு அமைக்கப்பட்டு நீண்ட நாட்களாகியும் அவ்வீதிகளுக்கு பொறுப்பான வவுனியா வடக்கு, நெடுங்கேணிப் பிரதேச சபை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.