இன்றைய தினம் சுவிஸ் நாட்டில் உள்ள தொலைக்காட்சி ஊடகத்தில் மனிதநேயப் பணியாளர்களின் நடைப்பயணத்தை ஒளிப்பரப்பு செய்ததுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தற்கதாகும்.
இன்று குளிராக இருந்த பொழுதும் மனிதநேயப் பணியாளர்கள் உறுதி தளராமல் தாய்மண்ணை மனதில் நிறுத்தி நடைப்பயணத்தை தொடர்கின்றனர்.
நடந்து செல்லும் பாதையில் ஈழத்தமிழர்களின் இனவழிப்பை வேற்றின மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாக நான்கு மொழிகளில் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டு வருகின்றது.
எதிர்வரும் 10.03.2014 அன்று நடைப்பயணத்தை முன்னெடுக்கும் மனிதநேயப் பணியாளர்கள்; ஐ.நா.வின் மனிதவுரிமை மன்றத்தின் முன் இடம்பெறவுள்ள எழுச்சி நிகழ்வில் பங்கெடுப்பார்கள். அன்றைய தினம் அனைத்து தமிழுறவுகளும் எழுச்சி நிகழ்வில் கலந்துக் கொண்டு வரலாறு காணாத மாபெரும் எழுச்சிப் போராட்டமாக திகழ வழியமைக்க வேண்டும்.
மேலதிக விபரங்கள் அறியத்தரப்படும்.