தியாக தீபத்தின் நினைவுநாளில் நல்லூரில் கம்பன் விழாவாம்!

செண்பகம் நிருபர். இந்திய அரசுக்கு எதிராகவும் தமிழ் ஈழ மக்களின் உரிமைக்காகவும் உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த தியாகி லெப்டினன் கேணல் திலீபன் அவர்களின் நினைவுநாளில் உண்ணாவிரதம் நடைபெற்ற இடத்தில் யாழ் கம்பன் விழா 2016ஐ நடத்தப்போவதாக கம்பன் கழகம் அறிவித்துள்ளமையை பல்வேறு தரப்பினரும் கண்டித்துள்ளனர்.

எதிர்வரும் 15ஆம் திகதி தியாக திலீபன் அவர்கள் உண்ணா நோன்பு மேற்கொள்ளத் தொடங்கிய தினமாகும். அந்த நாளிலேயே இவ்வாறு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  தமிழ் மக்களின் மனங்களை சீண்டும் வகையில் இவ்வாறு கம்பன் கழக விழாவை குறித்த திகதியில் குறித்த இடத்தில் நடாத்துகின்றனரா என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதனை உடனடியாக தடுத்து நிறுத்துமாறும் தியாகி திலீபன் அவர்களின் தியாகப்போராட்டத்தை நினைவுகூறும் நாட்களில் இதுபோன்ற செயற்பாடுகள் தமிழ் மக்களை சீண்டுபவை  என்றும் கம்பன் கழகம்மீது கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்திய அரசுஈகப் போராட்டம்தியாகப் போராட்டம்தியாகிதிலீபன்
Comments (0)
Add Comment