திருகோணமலையில் களப்பை விடுவிக்கக் கோரி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர்பிரிவில் உள்ள கும்புறுபிட்டி பெரிய கரைசை களப்பை விடுவிக்க கோரி மீனவர்கள் நேற்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த கரைச்சைப் பகுதியினை நீண்டகாலமாக அப்பகுதி மீனவர்கள் தமது வாழ்வாதாரமாகக் கொண்டபோதிலும் யுத்தம் முடிவடைந்ததும் அங்குள்ள சுமார் 1800 ஏக்கர் கரச்சைக்காணியை தனியார் கம்பனிக்கு மீனவர்களின் எதிர்ப்பையும் மீறி அரசு உப்பு உற்பத்திக்கு வழங்கியிருந்தது.

களப்பு தொழிலை நம்பி அதில் ஈடுபடும் 1000 மீனவத் தொழிவாளர்கள் உள்ளனர். இக்களப்பு பகுதிகளில் இறால், நண்டு, மீன்பிடி போன்றவற்றை ஜீவனோபாயமாக மேற்கொண்டு வருகின்றனர். றைகம் நிறுவனமானது 2009ம் ஆண்டு தமது பெரிய கரச்சியை உப்பளம் செய்வதற்கு நீண்ட நாட் குத்தகைக்கு 1805 ஏக்கர் காணியை எடுத்தது. மக்கள் யுத்த நெருக்கடிக்குள் இருந்த நிலையில் இக்காணிகள் முறையற்ற வகையில் எடுக்கப்பட்டடிருந்தன.

இவற்றில் 450 ஏக்கர் காணி உப்பளத்திற்கும் 37 ஏக்கர் காணி தொழிற்சாலைக்கும் வழங்கப்பட்டுள்ளது. ஏனைய 1318 ஏக்கர் காணி கடலின் களப்புகளில் சிறுகடல் தொழில் செய்யும் தொழிலாளர்களின் மீன் நண்டு வளர்ப்புகளுக்கென ஒதுக்கப்பட்டது.

ஆனால் இப்பகுதிகளில் மீன் வளர்ப்பு மற்றும் கொடுவ மீன் வளர்ப்போ நடைபெறுவதில்லை இவர்கள் இப்பகுதியிலிருந்து உப்பளத்திற்கான மேலதிகமான நீரை பெற்றுக்கொள்வதனால் களப்புகளில் சிறுகடல் தொழில் செய்யும் தொழிலாளர்கள் தொழில் ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் இவ் றைகம் நிறுவனமானது இப்பகுதியை குத்தகைக்கு எடுக்கும் போது களப்புகளில் சிறுகடல் தொழில் செய்யும் தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் வழங்குவதாக கூறினார்கள். இருப்பினும் அதை ஏற்கவில்லை. இக்களப்பை விடுவிக்குமாறு பலவிதமான கோரிக்கைளை மீனவர்களால் விடுவிக்கப்பட்டிருந்த போதிலும் அதற்கான தீர்வானது இதுவரை எட்டப்படவில்லை.

இந்நிலையில் 11.09.2018 ஆம் திகதி பிரதேச செயலாளரின் கோரிக்கைக்கிணங்க குறித்த நிறுவனத்திற்கு கும்புறுபிட்டி களப்பு பகுதியில் நீண்ட கால குத்தகையில் வழங்கப்பட்ட காணியில் 1000 ஏக்கர் களப்பு பகுதியை நீண்டகால குத்தகையில் இருந்து விடுவிப்பதாக பிரதேச செயலாளர் எழுத்துமூலம் அறிவித்திருந்தார் இதற்கு கம்பனி இணங்கியிருந்ததாகவும் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

ஆனாலும் மாதங்கள் பல கடந்தும் எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. ஆகையால் பெரிய கரச்சியில் தொழிலாளர்களுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் 1318 ஏக்கர் காணியை மீண்டும் தொழில் நடவடிக்கைக்கு அனுமதி பெற்றுத்தருமாறு வலியுறுத்தி குறித்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் அதனூடாக நீர் கொண்டு செல்வதினை தடுத்து உப்பளத்திற்காக அமைக்கப்பட்ட மண் அணைகளை அகற்றி தொழில் செய்யவசதி ஏற்படுத்தி உதவுமாறும் கோரிநிற்கின்றனர்.

குச்சவெளிமீன் வளர்ப்பு
Comments (0)
Add Comment