திருச்சி சிறப்பு தடுப்பு முகாமில் ஈழத்தமிழர்கள் 11 பேர்பட்டினிப் போரட்டம்!

திருச்சி சிறப்பு தடுப்பு  முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்மிழர்கள் தங்களை விடுதலை செய்யக் கோரி உண்ணா விரதப் போராட்டம் ஒன்றினை  நேற்று (23.12.2016) முதல் ஆரம்பித்துள்ளனர் .
மேலும், சிறப்பு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில்..

1) பிரபாகரன் த/பெ. நடனசபாபதி
2) சுதர்சன் த/பெ. சுதாகரன்
3) கோபிநாத் த/பெ. பேரின்பநாயகம்
4) தயாகரன் த/பெ. கிருஷ்ணபிள்ளை
5) குருவிந்தன் த/பெ. உமாகாந்தன்
6) தர்சன் த/பெ. ஜெகதீபன்
7) சத்தியசீலன் த/பெ. கந்தசாமி
8)ரொபின்பிரசாத் த/பெ. சகாயநாதன்
9) காந்தரூபன் த/பெ. சிவசுப்பிரமணியம்
10) குணசீலன் த/பெ. நாகராஜன்
11) யோககுமார் த/பெ. ரகுநாதன்

ஆகிய 11 ஈழத்தமிழர்களே உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அவுஸ்திரேலியாவிற்கு சட்ட விரோதமாகப் படகு மூலம் இவர்கள் செல்ல முயற்சித்தார்கள் என நாகர் கோயில் கியூ பிரிவு பொலிஸாரிடம் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும்,
அதன் பின்னர் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே வந்ததும், மீண்டும் கைது செய்யப்பட்டு சிறப்பு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஈழத்தமிழர்கள்உண்ணாவிரதம்கியூ பிரிவுகைதுசிறப்பு முகாம்திருச்சிவிடுதலை
Comments (0)
Add Comment