திருவள்ளூர் அணியை தோற்கடித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ்!

தமிழ்நாடு பிரிமீயர் லீக் தொடரின் 25-வது லீக் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – வி.பி. திருவள்ளூர் வீரன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியின் கோபிநாத், தலைவன் சற்குணம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார். தலைவன் சற்குணம் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். கோபிநாத் 7 ரன்கள் எடுத்த நிலையில் தன்வர் பந்தில் க்ளீன் போல்டானார். கால் நோ-பால் ஆனதால் கோபிநாத் அவுட்டில் இருந்து தப்பினார். தனக்கு கிடைத்த வாய்ப்பை கோபிநாத் சரியாக பயன்படுத்திக் கொண்டார்.

2-வது விக்கெட்டுக்கு கோபிநாத் உடன் சரவணன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி திருவள்ளூர் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தது. இருவரும் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்தனர். சரவணன் அரைசதம் அடித்து 54 ரன்களில் ஆட்டம் இழந்தார். அவர் 36 பந்தில் 4 சிக்ஸ், 2 பவுண்டரியுடன் இந்த ரன்னை குவித்தார். மறுமுனையில் கோபிநாத்தும் அரை சதத்தை கடந்தார்.

15 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் குவித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அதன்பின் சற்று பின்தங்கியது. 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய கேப்டன் சதீஷ் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். 5-வது வீரராக களம் இறங்கிய சசிதேவ் உதிரசாமி அதிரடியாக விளையாடினார். 18-வது ஓவரில் 17 ரன்கள் விளாசியது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் குவித்தது. சசிதேவ் உதிரசாமி 12 பந்தில் 18 ரன் எடுத்தும், கோபிநாத் 55 பந்தில் 62 ரன் எடுத்தும் கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர்.

இதனால் திருவள்ளூர் வீரன்ஸ் அணிக்கு 155 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட்சேப்பாக்கம்தமிழகம்திருவள்ளூர்பிரிமீயர் லீக்விளையாட்டுவெற்றி
Comments (0)
Add Comment