தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியில் ஸ்ரீலங்கா தோல்வி!

தென்னாபிரிக்க அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஸ்ரீலங்கா அணி 206 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது.

தென்னாபிரிக்காவிற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா அணி 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் விளையாடி வருகின்றது.

போர்ட் எலிசபெத், சென் ஜோர்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி தனது முதலாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி சகல விக்கெட்களையும் இழந்து 286 ஒட்டங்களை பெற்றது.

தென்னாபிரிக்க அணி சார்பாக ஜே.பி.டுமினி 63 ஒட்டங்களையும் ஸ்டீபன் குக் 59 ஒட்டங்களையும் பெற்றனர். ஸ்ரீலங்கா அணி சார்பாக பந்துவீச்சில் சுரங்க லக்மால் 5 விக்கெட்களை கைப்பற்றினார்.

இதனையடுத்து தனது முதலாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய ஸ்ரீலங்கா அணி 205 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

துடுப்பாட்டத்தில் ஸ்ரீலங்கா அணி சார்பாக தனஞ்சய டி சில்வா 43 ஒட்டங்களை பெற்றார், தென்னாபிரிக்க பந்துவீச்சில், வேனன் பிளன்டர் 5 விக்கெட்டுகளையும் கைல் அபோட் 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இந்நிலையில் தனது இரண்டாவது இனிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த தென்னாபிரிக்க அணி 6 விக்கெட்டுகளை இழந்து 406 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

தென்னாபிரிக்க அணி சார்பில் ஸ்டீபன் குக் 117 ஓட்டங்களையும் பெப் டூ பிளசிஸ் ஆட்டமிழக்காமல் 67 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்நிலையில் 488 ஒட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் ஸ்ரீலங்கா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் தனது இறுதி நாள் ஆட்டத்தை ஆரம்பித்திருந்தது.

இந்த நிலையில் 281 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்துள்ளது.

ஸ்ரீலங்கா அணியின் சார்பாக மென்டிஸ் 58 ஓட்டங்களையும், மெத்தியுஸ் 59 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

தென்னாபிரிக்கா சார்பில் ரபாடா 3 விக்கட்டுக்களையும், அபோட் 2 விக்கட்டுக்களையும் கைப்பற்றியுள்ளனர்.

கிரிக்கெட்தென்னாபிரிக்காதோல்விபோட்டிவிளையாட்டுஸ்ரீலங்கா
Comments (0)
Add Comment