தென்னாபிரிக்கா வெஸ்ட் இண்டீசிடம் தோல்வி!

வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் டி வில்லியர்ஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா அணி வெஸ்ட் இண்டீசிடம் தோல்வியைத் தழுவியது.

இதற்கு அந்த அணியின் மோசமான பேட்டிங்கே முக்கிய காரணமாக இருந்தது. தென்ஆப்பிரிக்கா அணி 30 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்திருந்தது. 31-வது ஓவரின் முதல் பந்தில் டி வில்லியர்ஸ் அவுட் ஆனார். அதன்பின் அந்த அணியின் விக்கெட்டுக்கள் சீட்டுக்கட்டாக சரிந்தது. கடைசி 16 ரன்களில் அந்த அணி ஐந்து விக்கெட்டுக்களை இழந்து 188 ரன்னில் சுருண்டது. கடைசி 20 ஓவர்களில் சிறப்பாக விளையாடியிருந்தால் 220 ரன்களுக்கு மேல் எடுத்திருக்கும். அப்படி எடுக்காததே தோல்விக்கு காரணம் என்று டி வில்லியர்ஸ் கூறியுள்ளார்.

தோல்வி குறித்து தென்ஆப்பிரிக்கா அணியின் டி வில்லியர்ஸ் கூறுகையில் ‘‘நேற்றைய போட்டியில் தோல்வியடைந்தது மிகவும் ஏமாற்றம் அளித்தது. கடைசி 10 முதல் 12 ஓவர்கள் நாங்கள் சரியாக விளையாடாதது எங்களை தோல்வி பாதைக்கு கொண்டு சென்றுவிட்டது.

நாங்கள் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருக்கிறோம். ஆகவே, எப்படியும் 220 ரன்களுக்குமேல் எடுத்துவிடுவோம். இது வெற்றிக்கு தேவையான ரன்னாக இருக்கும் என்று நினைத்தேன். துரதிர்ஷ்டவசமாக, 200-க்கு மேல் ரன் எடுக்க இயலாமல் போனது. நான் ரசௌவ் உடன் சேர்ந்து சிறந்த பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தினேன். ஆனால், நான் அவுட்டானபிறகு சரியாக பார்ட்னர்ஷிப் கிடைக்காமல் போனது. அதனால் கடைசி கட்டத்தில் பேட்ஸ்மேன்கள் சரிந்து விட்டனர். நான் சொன்னது போல் மேலும் 30 அல்லது 40 ரன்கள் சேர்த்திருந்தால் போட்டிக்கான சரியான ரன்னாக இருந்திருக்கும்.

எங்களுடைய மதிப்பீடு செய்தபடி ஆடுகளம் சரியாகத்தான் இருந்தது. நாங்கள் கடைசி 10 ஓவர்களில் சரியான பேட்டிங்கை வெளிப்படுத்தவில்லை. இது டர்னிங் மற்றும் ஸ்லோ ஆடுகளம் என்பது எங்களுக்குத் தெரியும். அதனால்தான் நாங்கள் கூடுதல் சுழற்பந்து வீச்சாளருடன் விளையாடினோம். எங்களுடைய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சரியான சமநிலையில்தான் இருந்தது. ஆகவே, எங்களுக்கு அனைத்து வாய்ப்புகளும் கிடைத்தது’’ என்றார்.

அவுஸ்த்ரேலியாகிரிக்கெட்தென்னாபிரிக்காதோல்விவெஸ்ட் இண்டீஸ்
Comments (0)
Add Comment