தென் ஆப்பிரிக்கா அணி ஐந்து ஒருநாள் போட்டித்தொடரில் விளையாடி வருகிறது

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா அணி ஐந்து ஒருநாள் போட்டித்தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது ஒருநாள்  போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 32 ஓட்ட வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டிவில்லியர்ஸ் களத்தடுப்பை தெரிவு செய்தார்.

இதன்படி துடுப்பெடுத்தாட அவுஸ்திரேலிய அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர் மற்றும் பிஞ்ச் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நிலைத்து நின்று ஆடி அதிரடியாக ரன்களை குவித்த நிலையில் ஆட்டமிழந்தனர்.

ஏழாவது விக்கெட்டுக்காக மேத்யூ வேட் பெய்லியுடன் ஜோடி சேர்ந்தார். அவரும் பெய்லியும் கூட்டாக 102 ரன்கள் சேர்த்திருந்த வேளையில் பெய்லி 70 ரன்னில் ஆட்டமிழந்தார். இதன்படி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அவுஸ்திரேலிய அணி 300 ஓட்டங்களை பெற்றது.

301 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கி தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். ஒருகட்டத்தில் டி வில்லியர்ஸ், மில்லரின் சிறப்பான ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்கா வெற்றியை நோக்கி பயணித்தது. 36 ஓவரில் தென் ஆப்பிரிக்கா அணி 202 ரன் எடுத்திருந்தது.

அப்போது தென் ஆப்பிரிக்கா வெற்றிக்கு 84 பந்தில் 99 ரன் தேவைப்பட்டது. ஆனால், 37-வது ஓவரின் முதல் பந்தில் மில்லர் 65 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன்பின் வந்த வீரர்கள் டி வில்லயர்ஸுக்கு சரியான முறையில் ஒத்துழைப்பு கொடுக்காததால் தென் ஆப்பிரிக்கா அணி தோல்வியை நோக்கி சென்றது.

இதன்படி தென் ஆப்பிரிக்க அணி 48.1 ஓவரில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 268 ஓட்டங்களை மட்டும் பெற்றது. அவுஸ்திரேலியா 32 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரில் அவுஸ்திரேலியா 1-0 என முன்னிலையில் உள்ளது.

அவுஸ்ரேலியாகளத்தடுப்புசுற்றுப்பயணம்டிவில்லியர்ஸ்தென் ஆப்பிரிக்காபோட்டிதொடர்ரன்வித்தியாசம்
Comments (0)
Add Comment