அவுஸ்திரேலிய அணியின் அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் நான் கேட்ட அணி எனக்கு கிடைக்கவில்லை என தெரிவு குழுவினர் மீது அதிருப்தி தெரிவித்துள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி அதிர்ச்சிகரமாக 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.
1983ம் ஆண்டு உலகக்கிண்ணப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி ஜிம்பாப்வேயிடம் தோற்று இருந்தது. அதன் பிறகு 31 ஆண்டுகளுக்கு பின் ஜிம்பாப்வே அணி அவுஸ்திரேலியாவை வீழ்த்தி இருக்கிறது. இந்த ஆட்டத்தில் 11 பேர் கொண்ட அணியில் பன்முக வீரர் சுமித் இடம் பெறவில்லை. தெரிவு குழுவினரின் இந்த முடிவால் அவுஸ்திரேலிய அணித்தலைவர் கிளார்க் அதிருப்தி அடைந்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், சுழற்பந்தை எதிர்கொள்வதில் சுமித் சிறந்த வீரர். நடுவரிசை துடுப்பாட்டத்தில் சுமித்தை தவறவிட்டோம். அவர் இடம் பெறாதது ஏமாற்றம் அளித்தது. தெரிவு குழுவினரின் முடிவால் தான் அவர் நீக்கப்பட்டார். தெரிவு குழுவின் இந்த முடிவு சரியானது அல்ல என்று கூறியுள்ளார்.