அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய, ஆசிய விவகாரங்களுக்கான முதன்மை பிரதி உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ் தெற்காசியாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டு செல்லவுள்ளார். குறித்த விஜயத்தின் ஓர் அங்கமாக அவர் இலங்கைக்கும் விஜயம் மேற்கொள்ளவர் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை இலங்கை, இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு செல்ல அவர் திட்டமிட்டுள்ளார். இந்த விஜயத்தின் போது குறித்த நாடுகளின் அரச அதிகாரிகளுடன் இருநாடுகளின் பரஸ்பர நலன் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அதேநேரம் வர்த்தக பிரமுகர்கள் மற்றும் சிவில் சமூகத்துடனும் பேச்சுவார்த்தை நடத்துவார் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.