தேசிய தடகள சாம்பியன்ஷிப் : தமிழக வீராங்கனைகள் 2 வெண்கலம் வென்றனர்

சென்னையில் நடைபெற்று வரும் தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 2-வது நாளில் தமிழக வீராங்கனைகள் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

மகளிர் 400 மீட்டர் தடை தாண்டுதலில் சேலத்தைச் சேர்ந்த லோகநாயகி, 1 நிமிடம் 3 புள்ளி 1 வினாடிகளில் இலக்கை கடந்து 3-வது இடம் பிடித்தார். அண்மையில் நடைபெற்ற ஃபெடரஷன் கோப்பைக்கான தடகளப் போட்டியில் லோகநாயகி இரண்டு பதக்கங்கள் வென்றிந்தார்.

இதே போல் 800 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை கோமதி வெண்கலம் வென்றார். இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளின் முடிவில் தமிழக அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா இரண்டாவது இடத்திலும்,கேரளா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

சாம்பியன்ஷிப்தமிழகம்தேசிய தடகள போட்டிபோட்டிவீராங்கனைகள்வெண்கலம்வென்றனர்
Comments (0)
Add Comment