தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து ஆரயும் கூட்டமைப்பு

இரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆராய்ந்து கொண்டிருக்கிறது. வரும் 27 ஆம் திகதி கூட்டமைப்பின் நிலைப்பாடு யாருக்கு என்பது குறித்து வெளியிடப்படும் இந்த வாரக் கடைசியில் இந்தியாவில் இருந்து நாடு திரும்பும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனே இறுதி முடிவை எடுப்பார் என்று என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

இந்த விடயம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கூட்டணிக் கட்சிகளுடனும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் கட்சிப் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடினோம். இதற்காக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பில் எங்கள் கட்சியினருக்கான கூட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால் எங்களின் நிலைப்பாட்டை சம்பந்தனின் வருகையின் பின்னரே அறிவிப்போம். கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் சிகிச்சைக்காக இரு வாரங்களுக்கு முன்னர் இந்திய மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாஇரா சம்மந்தன்கூட்டமைப்புஜனாதிபதிதமிழ்தலைவர்தேசியதேர்தல்நிலைப்பாடுமட்டக்களப்புமாகாணம்மாவைவிஞ்ஞாபனம்வேட்பாளர்
Comments (0)
Add Comment