இன்று உடல் பருமன் மற்றும் தொப்பையால் பல்ர் கஷ்டப்படுகிறார்கள். இதைனை குறைப்பதற்கு எத்தனையோ வழிகளையும் பலர் பின்பற்றி வருகின்றனர். அதற்காக எவ்வளவோ பணத்தையும் செலவு செய்கின்றார்கள்
பணத்தை வீணாக்காமல் இலகுவாக உங்கள் தொப்பையை குறைக்கும் கேரட் மற்றும் ஆரஞ்சு சேர்ந்த ஜூஸ்.
ஒருவரது உடல் எடை மற்றும் தொப்பையைக் குறைப்பதற்கு பல ஜூஸ்கள் உதவியாக இருக்கும்.
அதில் சிறப்பான ஒரு ஜூஸ் தான் கேரட் மற்றும் ஆரஞ்சு ஜூஸ்.
இரண்டையும் ஒன்றாக கலந்து குடித்து வந்தால், அதில் உள்ள கிளின்சிங் ஏஜென்ட்டுகள், உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துவதோடு, உடல் எடையைக் குறைக்கவும் உதவி செய்யும்.
கேரட்
கேரட்டில் உடலுக்குத் தேவையான விட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இதர ஊட்டச்சத்துக்களை வழங்கும்.
கேரட்டில் உள்ள நார்ச்சத்து நல்ல செரிமானத்திற்கு உதவுவதோடு உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றும்.
மேலும் கேரட் சுவை மொட்டுக்களை திருப்திப்படுத்தி, அளவுக்கு அதிகமான கலோரிகளை உணவு இடைவெளிகளுக்கு இடையே உட்கொள்வதைத் தடுக்கும்.
அதோடு கேரட் இயற்கையாக ஒரு சிறுநீர்ப்பெருக்கி என்பதால், இது சிறுநீரகங்களின் வழியே உடலில் இருந்து அதிகப்படியான நீர்மத்தை வெளியேற்றத் தூண்டும்.
ஆரஞ்சு
பொதுவாக ஆரஞ்சு நிற காய்கறி உடலை சுத்தம் செய்வதோடு, செரிமான நொதிகளை சுறுசுறுப்பாக செயல்படச் செய்து, உடலில் கழிவுகளை வெளியேற்றும் திறனை மேம்படுத்தும்.
அந்தவகையில் ஆரஞ்சு பழத்தில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், உடலைத் தாக்கும் பல்வேறு நோய்களான இதய நோய், புற்றுநோய், இரைப்பைக் குடல் பிரச்சனை போன்றவற்றை எதிர்த்துப் போராடும்
ஆரஞ்சு பழத்தில் உள்ள அமிலங்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்து போன்ற உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, அதிகப்படியான கலோரிகளை எரித்து, உடல் எடையைக் குறைக்க உதவும்.
கேரட் ஆரஞ்சு ஜூஸின் நன்மைகள்
கேரட் மற்றும் ஆரஞ்சு ஜூஸ் கலவை நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும், இதய நோயைக் கட்டுப்படுத்தும், கொலஸ்ட்ராலைக் குறைக்கும், இரத்தம் உறைவதைத் தடுக்கும், புற்றுநோயைத் தடுக்கும், எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும், தொற்றுக்களைக் குணப்படுத்தும், கண் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும், வாய் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும், சரும ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் மற்றும் மூளையின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.
குறிப்பு
கேரட் ஆரஞ்சு மிக்ஸ் ஜூஸ் கலவையை செரிமான பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் . சில சமயங்களில் இந்த ஜூஸை ஒருவர் ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக குடித்தால், நெஞ்செரிச்சல், அதிகப்படியான அமில சுரப்பு மற்றும் சிறுநீரக பிரச்சனைகள் போன்றவை ஏற்படவாய்ப்புண்டு.