நகுலேஸ்வரன் படுகொலை சூத்திரதாரிகளை காப்பாற்ற முயற்சி

விடுதலைப்புலிகள் போராளி நகுலேஸ்வரன் படுகொலைச் சூத்திரதாரியான மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் சிறிஸ்கந்தகுமாரினை மன்னார் பிரதேச செயலகத்துக்கு இடமாற்றம் செய்ய பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இதுவரையில் அக்கிராம சேவகர் உட்பட 6 பேர் பொலிஸாரால் கைது செய்யபட்டு குற்றத்தடுப்புப் புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த கொலையுடன் தொடர்புடையவர் என்று மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் மீதும் குற்றச்சாட்டு வெளியிடப்பட்டுள்ளது. கொலையுடன் பல அரச உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருக்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், எவர் சம்பந்தப்பட்டிருந்தாலும் அவர்களின் பதவி நிலை பாராமல் கைது செய்து கடுமையான சட்டநடவடிக்கை எடுப்போம் என அரசு அறிவித்துள்ளது.

இவ்வாறான நிலையில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் சிறிஸ்கந்தகுமாரினை மன்னார் பிரதேச செயலாளராகவும் மன்னார் பிரதேச செயலாளர் கே.வசந்தகுமார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளராகவும் இடமாற்றம் செய்ய பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு பரிந்துரை செய்துள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே அவரை யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் செய்யவும் முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகின்றது.

இடம்மாற்றம்சூத்திரதாரிசெயலகம்செயலர்நகுலேஸ்வரன்படுகொலைபிரதேசம்போராளிமன்னார்மாந்தைமுன்னாள்விடுதலைப்புலிகள்
Comments (0)
Add Comment