ஆசியக்கிண்ண டி20 தொடரில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி மிர்புரில் நேற்று நடைபெற்றது. இதில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்ற பெற்ற இந்தியா இந்த தொடரில் 2வது வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தப் போட்டியில் முதலில் பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாடிய போது நெஹ்ரா தனது 3வது ஓவரை வீசினார்.
இந்த ஓவரின் 4வது பந்து பாகிஸ்தான் அணியின் துடுப்பாட்ட வீரர் குர்ராம் மன்சூரின் கையுறையில் பட்டு விக்கெட் கீப்பர் டோனியிடம் பிடியாக சென்றது. இதனால் ’அவுட்’ கேட்டு இந்திய வீரர்கள் நடுவரிடம் முறையிட்டனர். ஆனால் நடுவர் ’அவுட்’ கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த கோஹ்லி நடுவரை நோக்கி ஹிந்தியில் தகாத வார்த்தையால் திட்டிக் கொண்டிருந்தார். இதேபோல் அந்த ஓவர் முடிந்த பிறகு நெஹ்ரா எதற்கு ’அவுட்’ கொடுக்கவில்லை என்று நடுவரிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார்.