தென்ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 5-வது ஒருநாள் போட்டி 12-ந்தேதி கேப்டவுனில் நடந்தது. இதில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் பேட்டிங் செய்தபோது அவருடன் தென்ஆப்பிரிக்க வீரர் இம்ரான் தாகீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
நடுவர்கள் தடுத்தும் அவர் சண்டை போட்டார். இதையடுத்து விதி முறையை மீறிய இம்ரான் தாகீருக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 30 சதவீதத்தை அபராதமாக விதித்து உள்ளது.