நமது பூமி : அறிந்து கொள்வோம்

சூரியனிடமிருந்து 3 வது இடத்தில் அமைந்துள்ள கிரகமான பூமி பிரபஞ்சத்தில் உள்ள நன்கு அறியப்பட்ட உயிர் வாழ்க்கைக்கு உகந்த ஒரே கிரகமாக விளங்குகிறது எனலாம். சூரியனைச் சுற்றி அமைந்துள்ள நிலப்பரப்பை உடைய நான்கு கிரகங்களிலும்  மிகப் பெரியதான பூமி, ஏனைய எல்லா கிரகங்களிலும் மிகவும் அடர்த்தி கூடியதுடன் ஐந்தாவது மிகப் பெரிய கிரகமாகவும் விளங்குகின்றது.

சூரிய குடும்பம் தோன்றக் காரணமாக அமைந்த சோலார் நெபுலா எனும் அடர்ந்த வாயுப் படலத்திலிருந்து இயற்கையான திரள் வளர்ச்சி மூலம் சூரியனுடன் சேர்ந்து 4.54 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் நம் பூமி தோன்றியது.

எனினும் நம் பூமியில் உயிர் வாழ்க்கை தொடங்கி 1 பில்லியன் வருடங்களே ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பூமியின் தரைப் பரப்பை பெருமளவில் ஆக்கிரமித்துள்ள சமுத்திரங்களின் காரணமாக விண்வெளியிலிருந்து பார்க்கும் போது அழகிய நீல நிறமாகத் தென்படுவதால் “புளூ பிளானெட்” என பூமி அழைக்கப் படுகின்றது.

புவி மேற்பரப்பில் 70.8% வீதம் தண்ணீரால் மூடப்பட்டுள்ளது. மேலும் பூமியின் மேற்பரப்பில் காணப்படும் மூலகங்களின் அளவை ஒப்பிடும் போது சிலிக்கன் மிக அதிகமாக 60.2% வீதமும், அலுமினியம் 15.2% வீதமும் நீர் 1.4% வீதமும் கார்பனீரொட்சைட் 1.2% வீதமும் காணப் படுகின்றன.

பூமியின் திணிவு (5.98 * 10 இன் வலு 24) Kg ஆகும். பூமியின் மொத்தத் திணிவில் அதிக பட்சமாக இரும்பும் (32.1%), அதையடுத்து ஆக்ஸிஜெனும் (30.1%) தொடர்ந்து சிலிக்கனும் (15.1%) காணப்படுகின்றன.

நாம் வாழும் பூமி இன்னமும் 500 மில்லியன் தொடக்கம் 2.3 பில்லியன் வருடங்களுக்கு உயிர் வாழ்க்கைக்கு உகந்ததாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இனி பூமி பற்றி சுருக்கமான விபரங்களைப் பார்ப்போம் –


1.  பூமி தன்னைத் தானே ஒரு முறை சுழல எடுக்கும் காலம் – 0.99 நாள் அல்லது 23 மணி 56 நிமிடம் 4 வினாடிகள்.

2.  சூரியனை ஒரு முறை சுற்றி வர எடுக்கும் காலம் – 365.256366 நாட்கள் அல்லது 1.0000175 வருடம்

3.  சூரியனைச் சுற்றி பயணிக்கும் வேகம் – 29.783 Km/s

4.  பூமியின் சராசரி ஆரை: 6371 Km

5.  துருவ ஆரை: 6356.8 Km (பூமி பந்துபோல் உருண்டையாக இல்லாது துருவப் பகுதி சற்று  தட்டையாக இருப்பதனால்)

6.  சுற்றளவு (கிடை அச்சில்) : 40 075.02 Km

7.  நீள் கோள மேற்பரப்பளவு : 510 072 000 Km2

8.  கனவளவு – 1.0832073 * 10 இன் வலு 12 Km3

9.  நிறை – 5.9736 * 10 இன் வலு 24 Kg

10.  சராசரி அடர்த்தி : 5.5153 g/cm3

11.  மையத்திலிருந்து ஈர்ப்பு விசை : 9.780327 m/s2 அல்லது 0.99732 g

12.  தப்பு வேகம் : 11.186 Km/s

13.  சாய் கோணம் : 23.439281 பாகை

14.  எதிரொளி திறன் : 0.367

15.  மேற்பரப்பு வெப்பம் : 184 K(குறைந்த), 287 K (மத்திய), 331 K (அதிக பட்ச)

16.  வளிமண்டலத்தில் மேற்பரப்பு அழுத்தம் : 101.3 Pa

17.  துணைக் கோள் : 1 (சந்திரன்)

 

அறிவியல்பூமி
Comments (0)
Add Comment