கார்ல்சன் இந்தப் போட்டியில் மிக மோசமாக விளையாடி வருகிறார். நான்காவது சுற்றுக்கு முன்பு அவர் 0.5 புள்ளிகள் மட்டுமே பெற்று கடைசி இடத்தில் இருந்தார். இதனால் நேற்றைய போட்டியில் அவர் ஆனந்தை வெல்லவேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.
ஆனால், ஆனந்த் மிகவும் அபாரமாக ஆடி பலவீனமான நிலையில் உள்ள கார்ல்சனை வீழ்த்தினார். 47வது நகர்த்தலில் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார் கார்ல்சன். நான்காவது சுற்றின் முடிவில் 2.5 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்துக்கு முன்னேறியுள்ளார் ஆனந்த்.
3.5 புள்ளிகள் பெற்றுள்ள டொபலோவ் முதல் இடத்தில் உள்ளார். நாகமுரா (3), அனிஷ் கிரி (2.5) ஆகியோர் 2-வது மற்றும் 3-வது இடத்தில் உள்ளார்கள். அரைப் புள்ளி மட்டும் பெற்றுள்ள கார்ல்சன் தொடர்ந்து கடைசி இடத்தில் நீடிக்கிறார்.