நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
முதல் டெஸ்டில் 124 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்று 1-0 என முன்னணியில் உள்ளது. இரண்டாவது டெஸ்ட் இன்று லீட்ஸில் தொடங்கவுள்ளது. இத்தொடரை டிரா செய்தாலே தொடரை இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றும்.
இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் நல்ல பார்மில் உள்ளார். நடுவரிசையில் மொயின் அலி, ஜோ ரூட், ஜாஸ் பட்லர் ஆகியோர் நம்பிக்கை வீரர்களாக உள்ளனர். ஸ்டூவர்ட் பிராட், மார்க் ஊட் பந்துவீச்சில் அசத்தி வருகின்றனர்.
நியூசிலாந்து அணியில் முதல் போட்டியில் சொதப்பிய துடுப்பாட்ட வீரர்கள் இப்போட்டியில் அசத்த வாய்ப்புள்ளது. வில்லியம்ஸ், கப்டில், ராஸ் டெய்லர் அணிக்கு கை கொடுப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பந்துவீச்சில் டிரண்ட் பவுல்ட், மாட் ஹென்றி ஆகியோர் பக்கபலமாக இருக்கின்றனர்.