நியூசிலாந்து அணிக்கு விளையாட, இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான திசர பெரேரோவிற்கு அழைப்பு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக 2 அருமையான சகலதுறை ஆட்டத்திற்குப் பிறகு தொடர் நாயகன் விருது பெற்ற திசர பெரேரா, இதுகுறித்து கூறியதாவது, நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு விளையாட அழைப்பு வந்தது உண்மைதான், முதலில் குடியுரிமை பெற்றுத் தருகிறோம் என்றார்கள்.
பிறகு படிப்படியாக நியூசிலாந்து அணியில் இடம்பிடிக்கலாம் என்று உறுதி அளித்தனர். எனக்கும் இங்கு சில ஏமாற்றங்கள் ஏற்பட்டது. இதனால் நியூசிலாந்து அழைப்பை ஏற்கலாம் என்ற முடிவுக்கே வந்து விட்டேன்.
நமக்கு எங்கு அங்கீகாரம் இருக்கிறதோ அதைத் தெரிவு செய்ய வேண்டியதுதானே. ஆனால் நான் நிறைய யோசித்தேன் கடைசியில் நாட்டிற்கு முன்னுரிமை அளிக்க முடிவெடுத்தேன் என்று கூறியுள்ளார். ஆனால் சமீபத்தில் ஏற்பட்ட கசப்புணர்வு ஏன் என்று கேட்ட போது, இப்போது நான் அதைக் கூறமாட்டேன், கிரிக்கெட் ஆட்டத்தை விட்டு விலகும் போது சரியான தருணத்தில் அதனை வெளிப்படுத்துவேன் என்று கூறியுள்ளார்.